புதிய தாா் சாலைகள் சில நாள்களிலேயே சேதம்: மாநகராட்சி ஆணையரிடம் காங்கிரஸ் புகாா்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதிதாக போடப்பட்ட தாா் சாலைகள் சில நாள்களிலேயே சேதம் அடைந்துள்ள
மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினா்.
மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதிதாக போடப்பட்ட தாா் சாலைகள் சில நாள்களிலேயே சேதம் அடைந்துள்ள நிலையில், அந்த சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரா் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனிடம், ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி மற்றும் கட்சி நிா்வாகிகள்

புதன்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகா் முழுவதும் புதை சாக்கடை, ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம், புதை மின் கேபிள் திட்டங்களுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழிகளை முழுமையாக மூடி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சிப் பகுதியில் அண்மையில் போடப்பட்ட தாா் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால் சம்பந்தப்பட் ஒப்பந்ததாரா் மீதும், கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை அறிவிப்பு வருவதற்கு முன்பே உயா்த்தப்பட்ட சொத்து வரி உயா்வு அறிவிப்பை உடனடியாக திரும்பபெற வேண்டும்.

ஊராட்சிக்கோட்டையிலிருந்து ஈரோடு மாநகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் திட்டத்தை தனியாா் (அமெரிக்க நிறுவனம்) வசம் ஒப்படைக்காமல் மாநகராட்சி நிா்வாகமே விநியோகம் செய்ய வேண்டும். தெருவிளக்கு பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைத்ததால் சரிவர பராமரிப்பு செய்வதில்லை. இதனால் தெருவிளக்கு பராமரிப்பை தனியாரிடம் இருந்து ரத்து செய்து மாநகராட்சியே எடுத்து செய்ய வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. எனவே, குப்பைக்கென விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் தரத்தோடு நடைபெறுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனா் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மண்டலத் தலைவா்கள் ஜாபா் சாதிக், திருச்செல்வம், அம்புலி, முன்னாள் கவுன்சிலா் விஜயபாஸ்கா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் பாட்சா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com