சுடச்சுட

  

  சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி கரியகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
  புன்செய் புளியம்பட்டியை அடுத்த நல்லூரில் பழைமையான கரியகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கும்பாபிஷேக விழா அக்டோபர் 8 ஆம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 9 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் கால யாக பூஜையும், 10 ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜைபும், மூன்றாம் கால யாக பூஜையும், இரவு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
  புதன்கிழமை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. யாகசாலை நிறைவு வேள்வி நடைபெற்றது.புதன்கிழமை காலை 7 மணியளவில் யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துக் கொண்டு கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
  தொடர்ந்து, கரிய காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக  விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai