சுடச்சுட

    

    கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத தேர்த் திருவிழா: அக்டோபர் 1 இல் துவக்கம்

    By DIN  |   Published on : 12th September 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத தேர்த் திருவிழா அக்டோபர் 1 ஆம் தேதி துவங்குகிறது.
    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா அக்டோபர் 1 ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 2 ஆம் தேதி அதிகாலை கோயிலில் கொடியேற்றம் செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு அன்னப்பறவை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். 3 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 4 ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 5 ஆம் தேதி கருட சேவை வாகனத்திலும், 6 ஆம் தேதி யானை வாகனத்திலும் பக்தர்களுக்குப் பெருமாள் காட்சி தருகிறார்.
    7 ஆம் தேதி மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.35 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதர் தேரில் எழுந்தருளி காலை 9 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 10 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும், 11 ஆம் தேதி காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. 
     11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.  விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நந்தகுமார், கோயில் செயல் அலுவலர் கங்காதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai