சுடச்சுட

  

  திமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில், சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையத்தில் உள்ள குளத்தைத் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, மாநில நெசவாளரணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், சிவகிரி நகரச் செயலாளர் கோபால், ஒன்றிய துணைச் செயலாளர் பாபுராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  தூர்வாரும் பணியை, தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். சிவகிரியில் உள்ள தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, சிவகிரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.
  இதில், சிவகிரி, கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai