சுடச்சுட

    

    திறன் போட்டி: கொங்கு ஆர்க்கிடெக்சர் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 12th September 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கொங்கு ஆர்க்கிடெக்சர் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
    பெருந்துறை கொங்கு ஆர்கிடெக்சர் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் நவீன்குமார் கோவையில் அண்மையில் நடைபெற்ற உஷு எனப்படும் மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடு ஒருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.  
    நாகப்பட்டினத்தில் அண்மையில் தேசிய அளவில் நடைபெற்ற ஆர்கிடெக்சர் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் மாணவர் கிரி, போட்டோகிராபி போட்டியில் முதலிடமும், மாணவர்கள் தரணீதரன், பிரமோத்குமார் ஆகியோர் ஆர்கிடெக்சர் டிசைன் போட்டியில் சிறப்புப் பரிசையும் பெற்றனர்.    சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கொங்கு பொறியியல், ஆர்கிடெக்சர்  கல்லூரிகளின் தாளாளர் பி.சச்சிதானந்தம், பொறியியல் கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி, ஆர்கிடெக்சர் கல்லூரி டீன் பி.எஸ்.கோதை, ஆசிரியர்கள் பாராட்டினர்.    
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai