சுடச்சுட

  

  நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்குப் பாராட்டு விழா

  By DIN  |   Published on : 12th September 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நல்லாசிரியர் விருது பெற்ற ஈஞ்சம்பள்ளி  பி.கே.பி. சாமி மெட்ரிக் பள்ளியின் முதல்வருக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
  மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி  முதல்வர் எஸ்.வைஜெயந்தி. இவர் 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்று, சென்னையில் நடைபெற்ற விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நல்லாசிரியர் விருது வழங்கினார்.
  விருது பெற்ற முதல்வர் வைஜெயந்திக்கு பி.கே.பி. கல்வி நிறுவனங்களின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி குணசேகரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பெரியசாமி, திலகவதி, அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் பி.கே.பி.அருண் வரவேற்றார்.
  விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வரைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமணன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai