சுடச்சுட

  
  Shri-Nellaiappar-Temple-Kumbabishekam-3

  ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன் நகர் வனபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
  செப்டம்பர் 9 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. அன்று இரவு 7 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 10 ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றன.

  புதன்கிழமை காலை 7 மணிக்கு 4 ஆம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு மகா தீபாராதனையும், கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றன. காலை 9.56 மணிக்கு சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையில், வனபத்ரகாளியம்மன் கோயிலில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் பகல் 10.30 மணிக்கு மகா அபிஷேகம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

  விழாவில், ஈரோடு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai