சுடச்சுட

    

    பவானிசாகர் அணை பகுதியில் புகுந்த யானைகளை விரட்டிய கிராம மக்கள்

    By DIN  |   Published on : 13th September 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானிசாகர் அணைப் பகுதியில் கிராமத்தில் புகுந்த யானைகளை கிராம மக்கள் புதன்கிழமை விரட்டினர்.
    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியையொட்டி அமைந்துள்ள புங்கார் காலனியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காராட்சிக்கொரை வனப் பகுதியில் இருந்து வரும் யானைகள் தீவனம் தேடி பவானிசாகர் பழத்தோட்டம் வழியாக ஊருக்குள் அடிக்கடி புகுந்து வாழைகளைச் சேதப்படுத்தி வந்தன. பவானிசாகர் அணை பூங்கா கேட்டுகளை தள்ளி சுவர்களை சேதப்படுத்தின.
     இந்நிலையில், பவானிசாகர் அணை பழத்தோட்டம் வழியாக இரண்டு யானைகள் புங்கார் காலனி குடியிருப்புக்குள் புதன்கிழமை நள்ளிரவில் புகுந்தன. அப்போது பட்டாசுடன் தயாராக இருந்த கிராம மக்கள் யானைகளைப் பார்த்து சப்தம் போட்டு பட்டாசு வெடித்து துரத்தினர். பட்டாசுக்கு பயப்படாத யானைகளை அதிக இரைச்சலை ஏற்படுத்தும் ஜீப்புடன் சென்று வனப் பகுதிக்குள் விரட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai