சுடச்சுட

  

  பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கன மழை வியாழக்கிழமை மாலை பெய்தது. 
  கடந்த சில மாதங்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில் கிராமப்புறப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மானவாரிப் பயிர்கள் கருகத் தொடங்கின. இந்நிலையில், பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிமை மாலை கருமேகங்கள் சூழ்ந்ததோடு பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.
  நள்ளிரவு வரையில் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று, வியாழக்கிழமை மாலையிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இரண்டு நாள்களாகப் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இம்மழையால் மானாவாரி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai