சுடச்சுட

  

  பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
  ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுப் பேரவைக் கூட்டம் அதன் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசினார். 
  அதன் பிறகு அவர் செய்தியார்களுக்கு அளித்த பேட்டி:
  ஒவ்வோர் துறையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.  ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனில் 99.75 சதவீத கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். பவானிசாகர் அணைக்கு கீழ் பவானி ஆற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் 5 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். அவினாசி - அத்திக்கடவு திட்டம் 100 சதவீதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai