சுடச்சுட

  

  மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்

  By DIN  |   Published on : 13th September 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பவானியை அடுத்த மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  இச்சங்கத்துக்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டதால் நிர்வாகக் குழு தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 6 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஏற்கெனவே தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ப.குப்புசாமி உள்பட 6 பேர் மீண்டும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, தேர்தல் அலுவலர் எம்.ஆனந்த் தலைமையில் நிர்வாகக் குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  இதில், மீண்டும் நிர்வாகக் குழுத் தலைவராக ப.குப்புசாமி, துணைத் தலைவராக யூ.ஜெயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, பவானி ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, சங்கச் செயலாளர் ஆர்.மாதேஸ்வரன், ஆவின் குழுத் தலைவர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai