ஊமாரெட்டியூரில் ரூ. 9 லட்சத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி திறப்பு

அம்மாபேட்டை பேரூராட்சி, ஊமாரெட்டியூரில் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் மேல்தேக்கத் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 

அம்மாபேட்டை பேரூராட்சி, ஊமாரெட்டியூரில் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் மேல்தேக்கத் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 
அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம் பகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதாகவும், இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுமக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, சுந்தரம்பாளையத்தில் பொது பங்களிப்பு நிதி ரூ. 8.90 லட்சம் மதிப்பில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதனை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் வி.எஸ்.சரவணபவா, பேரூர் செயலாலர் செந்தில்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட பிரதிநிதி ராஜு, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கச் செயலாளர் பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com