நம்பியூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நம்பியூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். 

நம்பியூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். 
மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.கலைவாணி தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்களால் நம்பியூர் வட்டாரப் பகுதி, நம்பியூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.  
இந்த ஆய்வில் பேக்கரி கடைகள், மளிகை, இனிப்பு, பலகார விற்பனைக் கடைகள் போன்ற 30 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, அதிக அளவு நிறமூட்டப்பட்ட இனிப்பு, கார வகைகள் சுமார் 35 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.   
மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 15 கிலோ, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் 8 கிலோ அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமம் பதிவு பெறாமல் இயங்கி வந்த சுமார் 10 கடைகளுக்கு அறிவிக்கை அளிக்கப்பட்டது. மேலும், உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமம் பதிவு பெறாமல் இயங்கி வந்தால்  நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது, உணவுப் பொருள்கள் குறித்த புகார்கள் கண்டறியப்பட்டால் 94440-42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com