பவானிசாகர் அணை பகுதியில் புகுந்த யானைகளை விரட்டிய கிராம மக்கள்

பவானிசாகர் அணைப் பகுதியில் கிராமத்தில் புகுந்த யானைகளை கிராம மக்கள் புதன்கிழமை விரட்டினர்.

பவானிசாகர் அணைப் பகுதியில் கிராமத்தில் புகுந்த யானைகளை கிராம மக்கள் புதன்கிழமை விரட்டினர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியையொட்டி அமைந்துள்ள புங்கார் காலனியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காராட்சிக்கொரை வனப் பகுதியில் இருந்து வரும் யானைகள் தீவனம் தேடி பவானிசாகர் பழத்தோட்டம் வழியாக ஊருக்குள் அடிக்கடி புகுந்து வாழைகளைச் சேதப்படுத்தி வந்தன. பவானிசாகர் அணை பூங்கா கேட்டுகளை தள்ளி சுவர்களை சேதப்படுத்தின.
 இந்நிலையில், பவானிசாகர் அணை பழத்தோட்டம் வழியாக இரண்டு யானைகள் புங்கார் காலனி குடியிருப்புக்குள் புதன்கிழமை நள்ளிரவில் புகுந்தன. அப்போது பட்டாசுடன் தயாராக இருந்த கிராம மக்கள் யானைகளைப் பார்த்து சப்தம் போட்டு பட்டாசு வெடித்து துரத்தினர். பட்டாசுக்கு பயப்படாத யானைகளை அதிக இரைச்சலை ஏற்படுத்தும் ஜீப்புடன் சென்று வனப் பகுதிக்குள் விரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com