Enable Javscript for better performance
இருதரப்பினரிடையே தகராறு: கோயில் பூசாரிகள் சிறைவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இருதரப்பினரிடையே தகராறு: கோயில் பூசாரிகள் சிறைவைப்பு

    By DIN  |   Published on : 14th September 2019 07:04 AM  |   அ+அ அ-   |    |  

    கடம்பூர் மலைப் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கோயில் பூசாரிகள் சிறை வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள சிக்கூர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள பசுவேஸ்வரர் கோயில் சம்பந்தமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் கடந்த ஓராண்டாக கோயில் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது.
    இந்நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்த கோயில் பூசாரிகள் மூர்த்தி, மாதேவன் இருவரும் கோயிலின் கதவை திறந்து உள்ளே சென்று பூஜை செய்ய முற்பட்டனர். இதைக் கண்ட மற்றொரு தரப்பினர் கோயில் கதவைப் பூட்டினர். இதனால், கோயிலுக்குள் சென்ற 2 பூசாரிகளும் கோயிலை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே அமர்ந்து கொண்டனர்.
    இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போலீஸார் கோயிலின் கதவைத் திறந்து பூசாரிகளை மீட்டனர்.

    kattana sevai