Enable Javscript for better performance
மழையால் நிரம்பியது சூரம்பட்டி அணைக்கட்டு: நுரையுடன் வெளியேறும் தண்ணீர்- Dinamani

சுடச்சுட

    

    மழையால் நிரம்பியது சூரம்பட்டி அணைக்கட்டு: நுரையுடன்  வெளியேறும் தண்ணீர்

    By DIN  |   Published on : 14th September 2019 07:05 AM  |   அ+அ அ-   |    |  

    ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு முழுமையாக நிரம்பிய நிலையில் நுரையுடன் தண்ணீர் வெளியேறுகிறது.
    ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டுக்கு கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை தண்ணீரும் வருகிறது. இந்த அணைக்கட்டில் சுமார் 7 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணை நிரம்பும்பட்சத்தில் மீதமுள்ள தண்ணீர் பெரும்பள்ளம் ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலந்து வீணாகிறது.
    சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து மதகுகள் வழியாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டால் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத் தாமரை சூழ்ந்துள்ளது.
    இந்நிலையில், அண்மையில் பெய்த கன மழை காரணமாக சூரம்பட்டி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், அணை நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து பெரும்பள்ளம் ஓடையில் விழும் தண்ணீர் வெண்நுரையுடன் வெளியேறுகிறது. 
    இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
    சூரம்பட்டி அணைக்கட்டின் மேல் பகுதியில் சாய, சலவை ஆலைகள் செயல்படவில்லை. அதனால் அணைக்கட்டில் சாயக்கழிவுநீர் கலக்க வாய்ப்பில்லை. அணைக்கட்டில் அதிக அளவில் சாக்கடை கழிவுநீர்தான் கலக்கிறது. இதன் காரணமாக தண்ணீர் நுரையுடன் ஓடுவதாகத் தெரிகிறது என்றனர்.

    kattana sevai