ஏர்முனை கூட்டுப் பண்ணைய உற்பத்தி விவசாயிகள் கூட்டம்

கோபிசெட்டிபாளையத்தில் ஏர்முனை கூட்டுப் பண்ணைய உற்பத்தி விவசாயிகளின் சார்பில் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் ஏர்முனை கூட்டுப் பண்ணைய உற்பத்தி விவசாயிகளின் சார்பில் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம், நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 900 விவசாயிகள் ஒன்றிணைந்து ஏர்முனை கூட்டுப்  பண்ணைய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனமானது வேளாண்மைத் துறை, வேளாண்மை விற்பனை, வேளாண்மை வணிகத் துறை மூலம் உருவாக்கப்பட்டு நிதி பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தமிழக அரசு மூலம் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஏர்முனை கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் ஒன்றாகும். 
இந்நிறுவனம் 10 இயக்குநர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்த நாட்டுச்சர்க்கரை, எள், எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதுடன் ஒரு முன்னோடி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஏர்முனை கூட்டுப் பண்ணைய  உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா, தோட்டக் கலை இணை இயக்குநர் தமிழ்செல்வி உள்பட வேளாண்மைத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில், விவசாயிகள் விளை பொருள்களை மதிப்புக் கூட்டல் முறையில் விற்பனை செய்வது, தானிய வகை சாகுபடியில் ஆர்வம் காட்டுவது, ஒரே பயிர் வகையை கூட்டுப் பண்ணைய முயற்சியில் சாகுபடி செய்து உற்பத்தியை உயர்த்துவது வேளாண்மை விளை பொருள்களை மதிப்புக்கூட்டல் முறையில் ஏற்றுமதி செய்வது போன்ற ஏராளமான விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும், கூட்டுப் பண்ணைய முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு என்பதை விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com