மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
By DIN | Published On : 19th September 2019 08:30 AM | Last Updated : 19th September 2019 08:30 AM | அ+அ அ- |

ஈரோட்டில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மனைவி ராணி (50). இவர், அரிசி மாவு அரைப்பதற்காக கிரைண்டரை செவ்வாய்க்கிழமை இரவு இயக்கிக் கொண்டிருந்தார். அருகே அவரது பேரன் ஜெயபிரகாஷ் (6) நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், மயக்கமடைந்த இருவரையும் மீட்ட உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் ராணி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. ஜெயபிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு விபத்து: ஈரோட்டை அடுத்த அவல்பூந்துறையைச் சேர்ந்தவர் தியாகராஜன் (38). எலக்ட்ரீஸியன். இவர், கள்ளுக்கடைமேடு, சீனிவாசா தெருவில் ஒரு வீட்டில் மின் மோட்டாரில் செவ்வாய்க்கிழமை மாலை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். அப்பகுதியினர், தியாகராஜனை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றபோது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.