கோபி கலைக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 22nd September 2019 04:53 AM | Last Updated : 22nd September 2019 04:53 AM | அ+அ அ- |

மத்திய அரசின் விண்வெளித் துறை, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, கோபி கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து உலக விண்வெளி வார விழாவையொட்டி, கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் விண்வெளிக் கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு வரவேற்றார். கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் பி.கருப்பண்ணன், கல்லூரிச் செயலாளர், தாளாளர் எம்.தரணிதரன், கல்லூரி டீன் ஆர்.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்தக் கண்காட்சி அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்துப் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றார்.