மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மழைக் காலம் துவங்கியுள்ளதால் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் அந்நியூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மழைக் காலம் துவங்கியுள்ளதால் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் அந்நியூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  
கட்சியின் அந்தியூர் நகர கிளைக் கூட்டம்  கிளைச் செயலாளர் ஏ.எம்.செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, வட்டாரக் குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், மழைக் காலம் துவங்கி உள்ளதால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் தேங்குவதைத் தடுத்தல், கொசுமருந்து அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.  அந்நியூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தியூர் பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களிடம் தேவையில்லாத, முன்னறிவிப்பில்லாமல் பல்வேறு பதிவுகளுக்கு பணம் வசூல் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிடவேண்டும்.  அந்தியூர் பேரூராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் பல இடங்களில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் கிளைச் செயலாளர்கள் கே.முனுசாமி, கே.ஏ.குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com