Enable Javscript for better performance
காவிரியில் உபரிநீர் திறப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில் உபரிநீர் திறப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 25th September 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரியில்   60,000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் 60,000 கன அடி வரை உபரி நீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், கால்நடைகள், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 
    காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகள் குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
    வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பிலும் தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai