தேசிய வணிகர்கள் நல வாரியத்துக்கு கொடுமுடி வட்டார வணிகர்கள் நலச்சங்கம் வரவேற்பு

கொடுமுடி வட்டார அனைத்து வணிகர்கள் நலச் சங்கம் சார்பில், 4 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது.

கொடுமுடி வட்டார அனைத்து வணிகர்கள் நலச் சங்கம் சார்பில், 4 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் கே.பத்ரிநாராயணன் தலைமை வகித்தார். சாலைப்புதூர் பி.கந்தசாமி, சங்கப் பொருளாளர் வி.டி.சுப்பிரமணியம், சங்க ஆலோசகர் எ. ராஜாசுப்பிரமணியம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர்  கே.ஆர்.ஷேக்பரீத் அலி வரவேற்றார். ஜே.குணசேகரன் செயலாளர் அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவனேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். சங்க முன்னாள் செயலாளர் சி.தனசேகர் வாழ்த்துரை வழங்கினார். 
கூட்டத்தில், தேசிய வணிகர்கள் நல வாரியம் அமைத்திட முடிவெடித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேற்படி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் 60 வயதைக் கடந்த அனைத்து வணிகர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் வருவதை அனுமதிக்கக் கூடாது.
கொடுமுடியில் செயல்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் சிறந்த மாணவ, மாணவிகளை ஊக்குவித்துப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com