மத்திய அரசைக் கண்டித்து கட்டடத் தொழிலாளர்கள் தர்னா

தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மத்திய சட்டத்தையும்,  

தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மத்திய சட்டத்தையும்,  நலவாரியங்களையும் முடக்க மத்திய அரசு முயற்சி செய்வதைக் கண்டித்து கட்டடத் தொழிலாளர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.  
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் குழு சார்பில் ஈரோடு தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி தலைமை வகித்தார். 
மாவட்ட துணைத் தலைவர்கள் பி.எஸ்.பூபதி, என்.பி.ரவி, என்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் ஜி வெங்கடாசலம், பழங்குடி மக்கள் சங்க ஈரோடு மாவட்டத் தலைவர் பி.வி.பாலதண்டாயுதம், தெருவோர வியாபார தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.கு.பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com