மாவட்டத்தில் பலத்த மழை: அம்மாபேட்டையில் 85.6 மி.மீ. பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை திங்கள்கிழமை இரவு பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 85.6 மி.மீ. மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை திங்கள்கிழமை இரவு பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 85.6 மி.மீ. மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு 12  மணிக்குத் தொடங்கி 4 மணி வரை ஈரோடு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதி, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் அப்பகுதியில் வயல், தோட்டங்களில் தண்ணீர் நிரம்பியது.
ஈரோடு, சூரம்பட்டி, சம்பத்நகர், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், திண்டல், வீரப்பம்பாளையம், ஆனைக்கல்பாளையம், சோலார், லக்காபுரம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், சாஸ்திரி நகர் உள்பட மாநகர் முழுவதும் பலத்த மழை பெய்தது.
இதையொட்டி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு மூலப்பாளையம், கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம் உள்பட பல இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த கன மழையால் ஈரோடு - சென்னிமலை சாலையில் ரங்கம்பாளையம் நுழைவுப் பாலத்தில் காலை 10 மணிக்குப் பிறகும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 85.6 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஈரோடு 62, வறட்டுப்பள்ளம் 46, கவுந்தப்பாடி 30, குண்டேரிப்பள்ளம் 26, பவானி 24.4, கொடுமுடி 13.6, பெருந்துறை 12, தாளவாடி 10, எலந்தைக்குட்டைமேடு 9.4, கோபி 8, சத்தியமங்கலம், நம்பியூர் 7, கொடிவேரி 6.2, பவானிசாகர் 6, மொடக்குறிச்சி 4, சென்னிமலை 3 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com