ராணுவப் பணிக்கு அக்டோபர் 26 இல் எழுத்துத் தேர்வு

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் சோல்ஜர் ஜிடி பிரிவில் உடல் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் சோல்ஜர் ஜிடி பிரிவில் உடல் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) கோவையில் நடைபெறவுள்ளது.  
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில்  ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் கடந்த 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆள்சேர்ப்பு முகாமில் சோல்ஜர் ஜிடி பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எழுத்துத் தேர்வு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், இந்தத் தேர்வு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. 
தேர்வில் கலந்துகொள்ள உள்ளவர்கள் தேர்வு நாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவை - மதுக்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள 191 பீல்டு ரெஜிமெண்ட்டில் (ஆர்மி கேம்ப்) தவறாது நேரில் ஆஜராக வேண்டும். 
மேலும், இதுதொடர்பாக விவரங்கள் வேண்டுவோர் 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com