பவானி கூடுதுறையில் இன்று மஹாளய அமாவாசை வழிபாடு

காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மஹாளய அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பரிகார பூஜைகள் சனிக்கிழமை நடைபெறுவதால் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு


காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மஹாளய அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பரிகார பூஜைகள் சனிக்கிழமை நடைபெறுவதால் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனவும், இந்நாளில் தங்களது மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதோடு, தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. காவிரி, பவானி, கண்ணுக்குப் புலப்படாத அமுதநதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் மஹாளய அமாவாசையில் திரளானோர் மூதாதையர் வழிபாட்டுக்கு வருவது வழக்கம். 
புரட்டாசி அமாவாசை சனிக்கிழமை (செப்டம்பர் 28) என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று பரிகார மண்டபங்கள் தவிர்த்து, கூடுதுறை வளாகம் முழுவதும் தற்காலிக பரிகாரக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாத வகையில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
தீயணைப்புப் படையினரும் மீட்பு, உயிர் காக்கும் உபகரணங்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
கூடுதுறை வளாகம், வாகன நிறுத்துமிடத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்கள் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, போலீஸார் சாதாரண உடைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com