Enable Javscript for better performance
அவல்பூந்துறையில் ரூ. 78 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்- Dinamani

சுடச்சுட

    


    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 78 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. 
    மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,797 மூட்டைகளில் 93 ஆயிரத்து 440 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 101.95 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 95.95 க்கும், இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 92.05 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 54 க்கும் என மொத்தம் ரூ. 78 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
    இதேபோல, 11 ஆயிரத்து 145 கிலோ எடையுள்ள 28 ஆயிரத்து 385 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.  இதில், அதிக விலையாக டன் ரூ. 28 ஆயிரத்து 240, குறைந்த விலை டன் ரூ. 21 ஆயிரத்து 490 என ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் ஒன்றுக்கு ரூ. 5.52 முதல் ரூ. 14.21 வரை ஏலம் 
    நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai