அக்டோபர் 1 இல் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் கையுந்துப் போட்டி துவக்கம்

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் நிறுவனர் பி.ஆர்.நடராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கான கையுந்துப் போட்டிகள் அக்டோபர் 1, 2, 3 ஆம் தேதிகளில் கல்லூரி  வளாகத்தில் நடைபெறவுள்ளது.


கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் நிறுவனர் பி.ஆர்.நடராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கான கையுந்துப் போட்டிகள் அக்டோபர் 1, 2, 3 ஆம் தேதிகளில் கல்லூரி  வளாகத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிகளை, முன்னாள் வருமான வரித் துறை துணை ஆணையரும், தமிழ்நாடு ஒலிம்பிக் அமைப்பின் செயலாளருமான என்.சுப்பிரமணியன் துவக்கி வைக்கவுள்ளார். 
மூன்று நாள்கள் நடைபெறும் கையுந்துப் போட்டியில், கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி, கேரள மாநிலம் ஸ்ரீ சேவியர் மகளிர் கல்லூரி, வயநாடு ஸ்ரீ மேரீஸ் கல்லூரி, திருச்சூர் ஸ்ரீ ஜோசப் கல்லூரி, நிறுவனம், சென்னை, இந்துஸ்தான் நிறுவனம், சென்னை எத்திராஜ் கல்லூரி, சென்னை அரசு முதல்நிலை கல்லூரி ஆகிய அணிகளைச்  சேர்ந்த வீராங்கணைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
நிறைவு நாள் பரிசளிப்பு வழாவில், சேலம்  ஸ்ரீ மேரீஸ் மேல்நிலைப் பள்ளிச் செயலாளர்,     பள்ளி முதல்வர் லூயி அலெக்ஸ் கலந்துகொண்டு பரிசு வழங்கவுள்ளார். இற்கான ஏற்பாடுகளை கல்லூரிச் செயலாளர் பி.என்.வெங்கடாசலம் செய்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com