ஈரோடு மனவளக் கலை மன்றத்தில் யோகா படிப்பு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு மனவளக் கலை மன்றத்தில் யோகா படிப்பு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


ஈரோடு மனவளக் கலை மன்றத்தில் யோகா படிப்பு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான யோகமும் மனித மாண்பும் படிப்பு வகுப்புகள் தொடக்க விழா, ஈரோடு மனவளக் கலை மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை வகித்து, வகுப்புகளைத் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்களை வழங்கினார். 
அப்போது அவர் பேசியதாவது: 
யோகமும், மனித மாண்பும் என்ற படிப்பை மக்களிடையே கொண்டு செல்ல வேதாத்திரி மகரிஷி கடந்த 2004 ஆம் ஆண்டு வேதாத்திரி மகரிஷி ஆன்மிக, உள்ளுணர்வு கல்வி நிலையம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு இதுவரை 30 பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ளது. 
இங்கு பட்டயம், இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் ஆகியவற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து முடித்துள்ளனர். இங்கு உடல் நலத்துக்கான உடற்பயிற்சி, மனவளத்துக்கான தியானப் பயிற்சி, உயிர் வளத்துக்கான காயகல்ப பயிற்சி, குடும்ப நலத்துக்கான அகத்தாய்வுப் பயிற்சிகள் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. யோகமும், மனித மாண்பும் என்ற படிப்பை ஈரோடு மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் இதுவரை 3,500 பேருக்கு மேல் படித்து முடித்துள்ளனர் என்றார். 
விழாவில், கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி பேசினார். ஈரோடு மனவளக் கலை மன்ற அறக்கட்டளைச் செயலாளர் வி.எம்.வெங்கடாசலம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com