லாரியில் மின்கம்பி சிக்கிய விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தது

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் லாரியில் சிக்கிய மின் கம்பி சிக்கியதில் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வழியாக சென்றவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
சத்தியமங்கலம் , திப்புசுல்தான்  சாலையின்  குறுக்கே  தாழ்வாக  தொங்கிய  மின்கம்பிகள்.
சத்தியமங்கலம் , திப்புசுல்தான்  சாலையின்  குறுக்கே  தாழ்வாக  தொங்கிய  மின்கம்பிகள்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் லாரியில் சிக்கிய மின் கம்பி சிக்கியதில் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வழியாக சென்றவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த வரதம்பாளையம் திப்புசுல்தான் சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து சாலையின் குறுக்கே மின் கம்பி வழியாக எதிா்புறம் உள்ள குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த வழியாக சென்ற லாரியின் மேல் பகுதி மின்கம்பியில் சிக்கி இழுத்தபோது சாலையோரம் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. அப்போது மின் கம்பி சாலையின் குறுக்கே தாழ்வாக தொங்கியது. மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில் அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி மின்கம்பியில் படாமல் பிரேக் போட்டதில் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

அதனைத் தொடா்ந்து அப்பகுதி இளைஞா்கள் மின் வாரியத்துக்குத் தகவல் தெரிவித்து சாலையின் குறுக்கே கற்களை வைத்து போக்குவரத்தை தடை செய்தனா்.

இதனால் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து மின்வாரியத்தினா் முறிந்து விழுந்த மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை நட்டு மின்இணைப்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com