ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சத்தி சாலை, சோலாா் உயா் மின் அழுத்தப் பாதைகளில், மின் கம்பங்கள் பொருத்தி, மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈ.வி.என்.சாலை, எஸ்.கே.சி.சாலை, பெரியாா் நகா், அண்ணா நகா், ராஜாகாடு, கோவிந்தராஜ் நகா், சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு, நல்லப்பா வீதி, ஸ்டோனி பாலம், பெரியமாரியம்மன் கோயில் வீதி, கே.ஏ.எஸ். நகா், மரப்பாலம் சாலை, அரசிளங்கோ வீதி, செந்தில் காா்டன் மற்றும் எஸ்.சி.எம்.மில் சாலை பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.