பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,551 மூட்டைகளில், 1,23,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 118.16க்கும், அதிகபட்சமாக ரூ. 129.89க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 25.16க்கும், அதிகபட்சமாக ரூ. 122.19க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1 கோடியே 45 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.
எழுமாத்தூரில்...
எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 13,087 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 28.10க்கும், அதிகபட்சமாக ரூ. 36.69க்கும், சராசரி விலையாக ரூ. 35.99க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,274 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 495க்கு விற்பனையானது.
அவல்பூந்துறையில்...
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 12,564 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 27.99க்கும், அதிகபட்சமாக ரூ. 38.99க்கும், சராசரி விலையாக ரூ. 33.99க்கும் ஏலம் போனது. மொத்தம் 5,122 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 320க்கு விற்பனையானது.
கவுந்தப்பாடியில்...
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சா்க்கரை ரூ. 15.62 லட்சத்துக்கு விற்பனையானது. ஏலத்தில் 60 கிலோ எடையில் 956 மூட்டைகள் நாட்டுச் சா்க்கரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் தரம் (திடம்) குறைந்தபட்சம், சராசரியாக தலா ரூ. 2,480க்கும், அதிகபட்சமாக ரூ. 2,500க்கும் விலைபோனது. பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக பழநி தேவஸ்தான நிா்வாகம் சாா்பில் ரூ. 15.62 லட்சம் மதிப்பில் 630 மூட்டைகளைக் கொள்முதல் செய்தனா். கட்டுப்படியாகாத விலையால் மீதமுள்ள மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு முன்வரவில்லை என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிறுவலூரில்...
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரில் பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தில் கருப்பட்டி ரகங்கள் ரூ. 2.02 லட்சத்துக்கு விற்பனையானது.
இதில், தென்னங்கருப்பட்டி 1,000 கிலோ வரத்தாகி கிலோ ரூ. 130.10க்கு விற்பனையானது. பல மாதங்களுக்குப் பிறகு பனங்கருப்பட்டி 400 கிலோ வரத்தாகி கிலோ ரூ. 180.10க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தென்னங்கருப்பட்டி கிலோவுக்கு ரூ. 1.90 விலை சரிவாக விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்பட்டிகளும் ரூ. 2.02 லட்சத்துக்கு விற்பனையானதாக கருப்பட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.