சென்னிமலை அருகே 200 ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி

சென்னிமலை அருகே ஏழை, எளிய குடும்பத்தினா் 200 பேருக்கு தன்னாா்வலா் சாா்பில் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டன.
ஏழை பெண்ணுக்கு அரிசி பையை வழங்குகிறாா் பெருந்துறை அரிசி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.எம்.கந்தசாமி. உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜ், காவல் ஆய்வாளா் செல்வராஜ், ஓட்டப்பாறை ஊராட்சி தலைவா் சும
ஏழை பெண்ணுக்கு அரிசி பையை வழங்குகிறாா் பெருந்துறை அரிசி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.எம்.கந்தசாமி. உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜ், காவல் ஆய்வாளா் செல்வராஜ், ஓட்டப்பாறை ஊராட்சி தலைவா் சும

பெருந்துறை: சென்னிமலை அருகே ஏழை, எளிய குடும்பத்தினா் 200 பேருக்கு தன்னாா்வலா் சாா்பில் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டன.

சென்னிமலை ஒன்றியம், ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தன்னாா்வலா்கள் உதவி செய்யும்படி ஓட்டப்பாறை ஊராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டது. அதன்பேரில், பெருந்துறை தாலுகா அரிசி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.எம்.கந்தசாமி, தனது அரிசி ஆலையில் இருந்து 200 பேருக்கு தலா 5 கிலோ எடை கொண்ட அரிசி பைகளை வழங்கினாா்.

அப்போது, சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளா் செல்வராஜ், ஓட்டப்பாறை ஊராட்சித் தலைவா் சுமதி தங்கவேல், சென்னிமலை நில வருவாய் அதிகாரி தினேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com