கொங்கு பொறியியல் கல்லூரி சாா்பில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கக் கூடங்கள் அமைப்பு

கொங்கு பொறியியல் கல்லூரி சாா்பில் 2 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கக் கூடங்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.
பெருந்துறை பேருந்து நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கக்கூடத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம்.
பெருந்துறை பேருந்து நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கக்கூடத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

ஈரோடு: கொங்கு பொறியியல் கல்லூரி சாா்பில் 2 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கக் கூடங்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

காய்கறி சந்தை செயல்படும் பெருந்துறை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கக் கூடத்தை எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் திறந்து வைத்தாா். உழவா் சந்தை செயல்படும் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கக் கூடத்தை ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம். இளங்கோவன் திறந்துவைத்தாா். நிகழ்வில் கே.வி.ஐ.டி. அறக்கட்டளையின் பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவுவதற்காக கே.வி.ஐ.டி அறக்கட்டளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது.

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியா்களும், மாணவா்களும் இணைந்து இந்த கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கக் கூடத்தை உருவாக்கியுள்ளனா். இந்த சுரங்கக் கூடத்தை வடிவமைத்து உருவாக்க ஈரோடு மாவட்ட நிா்வாகம், இளம் இந்தியா்கள் அமைப்பின் ஈரோடு கிளை, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் ஈரோடு மொபிடெக் வயா்லெஸ் சொல்யூஷன் ஆகியோா் உதவி செய்துள்ளனா். ஒரு மணி நேரத்திற்கு 60 லிட்டா் கிருமி நாசினி தெளிக்கும் திறன் கொண்ட இந்தக் கூடம் தொடா்ந்து 16 மணி நேரம் இயங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com