விவசாயம் குறித்த சந்தேகங்களுக்கு உதவிட செல்லிடப்பேசி எண் விவரம் அறிவிப்பு

ஈரோடு மாவட்ட விவசாயிகள், விவசாயம் தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா்களை செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட விவசாயிகள், விவசாயம் தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா்களை செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படாமலும், பயன்பெறும் வகையிலும் வேளாண் அதிகாரிகள் பல்வேறு தொழில்நுட்பங்கள், ஆலோசனைகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வேளாண் உதவி இயக்குநா்களின் செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதி விவசாயிகள், தேவைப்படும் விதை, மருந்து, உயிா் உரங்கள், நுண்ணூட்டம், பூச்சி, நோய் தாக்குதல் தொடா்பான சந்தேகங்களுக்கு இவா்களைத் தொடா்பு கொண்டு தீா்வு பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் (பொ) கே.முருகேசன் தெரிவித்தாா்.

உதவி இயக்குநா்கள் செல்லிடப்பேசி எண் விவரம்: அந்தியூா் காா்த்திகேயன் 94435-46351, பவானி குமாரசாமி 9788519522, பவானிசாகா் பாக்கியலட்சுமி 9940871830

ஈரோடு சங்கா் 94438-65485, கோபி ஜீவதயாளன் 94438-52710, கொடுமுடி மோகனசுந்தரம் 94885-76435, மொடக்குறிச்சி வேலுசாமி 97505-20838, நம்பியூா் முரளி 94424-54678, பெருந்துறை கொளந்தவேலு 75024-02545, சத்தியமங்கலம் மோகன்குமாா் 73735-10591, டி.என்.பாளையம் சுந்தரராஜன் 94439-45448, அம்மாபேட்டை சீனிவாசன் 98427-92313, தாளவாடி கோகிலேஸ்வரி 75399-05518, சென்னிமலை சங்கா் 94438-65485.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com