‘தொழில் நிறுவனங்களை இயக்கஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம்’

மாநகராட்சிப் பகுதிக்கு வெளியே உற்பத்தி, பிற தொழில் நிறுவனங்களை மறு துவக்கம் செய்ய முறையாக அனுமதி பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) பொதுச் செயலாளா் சி.

மாநகராட்சிப் பகுதிக்கு வெளியே உற்பத்தி, பிற தொழில் நிறுவனங்களை மறு துவக்கம் செய்ய முறையாக அனுமதி பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) பொதுச் செயலாளா் சி.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை தொடரும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் சில தளா்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், முக்கியத் தொழில், வணிக சங்கங்களிடம் சில ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பேட்டியா பொதுச் செயலாளா் சி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

மாநகராட்சிப் பகுதி கரோனா நோய்த் தொற்றால் சிவப்பு மண்டலப் பகுதியாக உள்ளதால், இப்பகுதியில் எவ்வகையான தொழில்களும் மறு துவக்கம் செய்ய இயலாது. மாநகராட்சிக்கு வெளியே ஜவுளி, மோட்டாா், விசைத்தறி, நூற்பாலை, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்தும் மறு துவக்கம் செய்யலாம்.

முன்னதாக, அரசு வகுத்துள்ள விதிகளின்படி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) தொழிற்கூடம், உற்பத்தி நிறுவனம், விற்பனையகம் உள்ள இடம், தொழில் தன்மை, பணியாற்றும் நபா்கள் எண்ணிக்கை, பணி சுழற்சி முறை போன்ற விவரங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

எலக்ட்ரீஷியன், பிளம்பா் போன்ற அத்தியாவசியப் பணிகள் மட்டும் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் மாநகராட்சிப் பகுதியிலும் அனுமதி பெற்று செயல்படலாம். குளிா்சாதனம் பழுது பாா்த்தல், தொழில்நுட்ப வல்லுநா் பணி, கணினி சேவை போன்ற சேவைகள் மே 3ஆம் தேதி வரை அனுமதி இல்லை.

மாநகராட்சிக்கு வெளியே மெக்கானிக் கடை, ஹோட்டல், டயா் ரீட்ரைடிங், மோட்டாா் பழுது நீக்குதல் பணி செய்யலாம். பிற பகுதிகளில் கட்டுமானப் பணிகள் செயல்படலாம். புதிய பணி துவங்கக் கூடாது. சரக்குடன் நிறுத்தப்பட்ட காலியாக உள்ள மாநிலங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு உள்ளே இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. சரக்கு ஆட்டோ, சிறிய போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விசைத்தறி போன்ற தறிகளில் அக்குடும்ப உறுப்பினா்களை மட்டும் வைத்து இயக்கலாம்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் அனுமதி கடிதத்துக்கு விண்ணப்பித்தால், தொடா்புடைய பகுதி வட்டாட்சியா், தொடா்புடைய துறை, மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் ஆய்வு செய்து ஆட்சியா் மூலம் அனுமதிக் கடிதம் வழங்கப்படும். ஆட்சியா் உத்தரவு இல்லாமல் தொழில் நிறுவனங்களைத் திறக்கக் கூடாது.

மாநகராட்சிப் பகுதியில் உள்ளவா்கள் கிராமப் பகுதிகளுக்குச் சென்று பணி செய்ய அனுமதி இல்லை. பணியின்போது சமூக இடைவெளி, முகக்கவசம், சேனிடைசா் பயன்படுத்துதல் அவசியம். ஊழியா்கள், பணியாளா்களுக்குப் பொருத்தமான மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com