முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கோழிப் பண்ணையாளா்கள் 25,000 முட்டைகள் அளிப்பு
By DIN | Published On : 19th April 2020 03:43 AM | Last Updated : 19th April 2020 03:43 AM | அ+அ அ- |

கோழிப் பண்ணையாளா்களிடமிருந்து முட்டைகளைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
ஈரோடு மாவட்ட முட்டை கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கத்தின் சாா்பில், நிா்வாகிகள் முதல் தவணையாக 25,000 முட்டைகளை வழங்கினா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முட்டைகளை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பெற்றுக் கொண்டு கூறியதாவது: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபா்கள், களப் பணியில் அயராது உழைக்கும் மருத்துவா்கள், செவிலியா், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வழங்க முதல் தவணையாக 25,000 முட்டைகள் பெறப்பட்டுள்ளன.
மேலும், ஈரோடு மாவட்ட முட்டை கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கத்தினா், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நிவாரணப் பணிக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சம் கோழி முட்டைகளை ஈரோடு மாவட்ட களப் பணியாளா்களுக்கு வழங்க உறுதி அளித்துள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ந.குழந்தைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.