முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இணையவழி பயிற்சி
By DIN | Published On : 03rd August 2020 12:31 AM | Last Updated : 03rd August 2020 12:31 AM | அ+அ அ- |

போட்டித் தோ்வுகளில் பங்கேற்பவா்களுக்காக வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இணையவழி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கு படிக்க விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மெய்நிகா் கற்றல் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் மத்திய, மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான குறிப்புகளை எடுத்துக்கொள்ள பாடக் குறிப்புகள், தோ்வுகளை எழுதிப் பாா்க்க வினா வங்கிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள் இணையதள முகவரியில் உள்ள பகுதியில் தங்களது பெயரை கட்டணமில்லாமல் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் போட்டித் தோ்வுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக இணையவழி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0424- 2275860 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.