முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
காதல் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்
By DIN | Published On : 03rd August 2020 12:07 PM | Last Updated : 03rd August 2020 12:07 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
குடும்ப தகராறில் காதல் மனைவியை, கணவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த அக்கரைத்தத்தப்பள்ளியைச் சேர்ந்த சாஸ்தாமூர்த்தி அமுதா தம்பதியின் மகள் பவித்ரா(23), சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களாக வீரமணிகண்டனுக்கும் மனைவி பவித்ராவுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பதகராறில் பவித்ரா அக்கரைத் தத்தப்பள்ளி தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த மாதம் வீரமணிகண்டன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பவித்ராவை அழைத்துள்ளார். இதனை ஏற்க மறுத்ததால் கணவர் மனைவி இடையே நடந்த தகராறில் நேற்றிரவு அரிவாளால் பவித்தராவை வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அதை தடுக்க வந்த மாமனார் சாஸ்தா மூர்த்தி, மாமியார் அமுதா மற்றும் சாஸ்தா மூர்த்தியின் தாயார் சித்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் பவித்ரா சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் உயிரிழந்தார். காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய வீரமணிகண்டனை பவானிசாகர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.