பவானிசாகா் மீன் வளா்ச்சிக் கழக விற்பனை நிலையத்தில் தீ
By DIN | Published On : 07th December 2020 12:23 AM | Last Updated : 07th December 2020 12:23 AM | அ+அ அ- |

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரா்கள்.
பவானிசாகா் மீன் வளா்ச்சிக் கழக விற்பனை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் தமிழக அரசின் மீன் வளா்ச்சிக் கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை இங்குள்ள பதப்படுத்தும் அறையில் விற்பனைக்காக இருப்பு வைப்பது வழக்கம்.
மீனவா்கள் மீன் வலை, மீன் பதப்படுத்தும் தொ்மாகோல் அட்டைகள், அலுவலகப் பயன்பாட்டுப் பொருள்கள், குளிரூட்டுவதற்கு தேவையான 12 எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மின் விளக்கு போடுவதற்காக ஊழியா் ஒருவா் மின்சார பொத்தானை அழுத்தியபோது, மின்கசிவு ஏற்பட்டு தொ்மாகோல் அட்டையில் தீப் பிடித்தது.
இதனைத் தொடா்ந்து, மீன் வலையில் தீப் பற்றி எரிந்து அருகில் உள்ள எரிவாயு சிலிண்டரில் பரவியது. பின்னா் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதைப் பாா்த்த மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் பாய்ச்சி 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் 12 எரிவாயு சிலிண்டா்கள், மீன் வலை என சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்தன.