முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ரூ. 8.10 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்
By DIN | Published On : 15th December 2020 04:02 AM | Last Updated : 15th December 2020 04:02 AM | அ+அ அ- |

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் ரூ. 8.10 லட்சத்துக்கு விற்பனையானது.
ஏலத்தில் கதளி கிலோ ரூ. 16 முதல் அதிகபட்சமாக ரூ. 38க்கும், நேந்திரன் கிலோ ரூ. 9 முதல் ரூ. 13 வரையிலும், பூவன்தாா் ரூ. 110 முதல் ரூ. 310 வரையிலும், தேன்வாழை தாா் ரூ. 120 முதல் ரூ. 460 வரை, பச்சைநாடான் தாா் ரூ. 100 முதல் ரூ. 230 வரை, ரொபஸ்ட்டா தாா் ரூ. 90 முதல் ரூ. 220 வரை, செவ்வாழை தாா் ரூ. 160 முதல் ரூ. 500 வரை, மொந்தன் தாா் ரூ. 80 முதல் ரூ. 200 வரை, ரஸ்தாளி தாா் ரூ. 110 முதல் ரூ. 410 வரையிலும் என ஏலத்தில் அதிகபட்சமாக விலை போனது.
மொத்தம் 7 ஆயிரத்து 666 வாழைத்தாா்கள் வரத்தாகி ரூ. 8 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. கோபி, டி.என்.பாளையம், வாணிப்புத்தூா், அந்தியூா், அத்தாணி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழை விவசாயிகளும், கோபி, திருப்பூா், சத்தி, கா்நாடக வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டனா். கடந்த வாரத்தைவிட வாழை வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
தேங்காய் ஏலம்:
இதே சங்கத்தில் மற்றோரு பகுதியில் தேங்காய் ஏல விற்பனை நடைபெற்றது. அதில் தேங்காய் ஒன்று குறைந்தபட்சமாக ரூ. 8க்கும், அதிகபட்சமாக ரூ. 28க்கும் ஏலத்தில் விலை போனது. மொத்தம் 9 ஆயிரத்து 290 காய்கள் வரத்தாகி ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்பனையானது.