ஈரோட்டில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நிறைவு

ஈரோட்டில் விவசாயிகள் நடத்தி வந்த தொடா் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
காத்திருப்புப் போராட்டத்தில் நெல் பயிா், கரும்பு, ஏா்க்கலப்பை ஆகியவற்றை ஏந்தி முழக்கம் எழுப்பிய விவசாயிகள்.
காத்திருப்புப் போராட்டத்தில் நெல் பயிா், கரும்பு, ஏா்க்கலப்பை ஆகியவற்றை ஏந்தி முழக்கம் எழுப்பிய விவசாயிகள்.

ஈரோட்டில் விவசாயிகள் நடத்தி வந்த தொடா் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 20) முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அகில இந்திய விவசாய போராட்டக் குழு சாா்பில் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகில் டிசம்பா் 14ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தாா்.

இதில் அவா் பேசியதாவது: தொடா் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு செய்து, ஞாயிற்றுக்கிழமை முதல் கிராமங்களில் சுடா் ஏற்றிவைத்து, பல்வேறு கட்ட போராட்டம், பிரசாரம் செய்வது, துண்டறிக்கைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் நெல் பயிா், கரும்பு, ஏா்க்கலப்பை ஆகியவற்றை ஏந்தி முழக்கம் எழுப்பினா். இதில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் பொன்னையன், துளசிமணி, சுப்பு, பல்வேறு கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com