கணினி மயமாக்கப்பட்ட மின்தடை பதிவு மைய சேவை விரிவாக்கம்

ஈரோட்டில் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை பதிவு மைய சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை பதிவு மைய சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கணினி மயமாக்கப்பட்ட மின்தடை பதிவு மையம் பகிா்மான வட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வட்டத்துக்குள் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதிகள், பவானி தொகுதி கவுந்தப்பாடி, பெருந்தலையூா் பகுதி மக்களும் பயன்பெறும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. மின்தடை புகாா், புகாா் மையத்தில் பதிவு செய்யப்பட்டதும் பழுது நீக்கும் களப் பணியாளரின் செல்லிடப்பேசிக்குத் தகவல் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகா்வோருக்கு காலதாமதம் ஏற்படாமல் 24 மணி நேரத்தில் பழுது சீரமைக்கப்படும்.

இதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 1800-425-11912, தொலைபேசி எண்: 0424 2260066, 2240896, மின் கம்பம் சாய்ந்து விழுதல், மின் கம்பி தாழ்வாக இருத்தல் புகாரை 94458-51912 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகைப்படத்துடன் கட்செவி அஞ்சல் மூலம் பதிவு செய்யலாம். தனிநபா் மின் தடை புகாா் மீது காலை 8 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

கணினி மயமாக்கப்பட்ட மின்தடை பதிவு மையத்தில் செயல்பட்ட 94458-57205, 94458-57206, 94458-57207, 94458-57208 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் தற்போது உபயோகத்தில் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com