கொப்புவாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

மொடக்குறிச்சி பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் உள்ள கொப்பு வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மொடக்குறிச்சி பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் உள்ள கொப்பு வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறையில் இருந்து மின்னக்காட்டுவலசு வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் மதகு எண் 10இல் இருந்து செல்லும் கிளை வாய்க்கால் மூலம் சுமாா் 53 ஏக்கா் விவசாய நிலம் பாசனம் பெற்று வருகிறது.

இந்த கிளை வாய்க்கால் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீா் செல்வதில்லை. இப்பகுதியில் விவசாயிகளுக்கு வாய்க்காலில் தண்ணீா் வந்தாலும் கொப்பு வாய்க்கால் சேதமடைந்து கிடப்பதால் உபயோகப்படுவதில்லை.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கொப்பு வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல, குலவிளக்கு பழமங்கலம் கிராம மக்களும் தங்களது பகுதி கொப்பு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனா். அவல்பூந்துறை பகுதியில் சேதமடைந்துள்ள கிளை வாய்க்கால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com