பிரிட்டனிலிருந்து ஈரோடு வந்த 16 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

பிரிட்டனிலிருந்து ஈரோடு வந்த 16 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

பிரிட்டனிலிருந்து ஈரோடு வந்த 16 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி தீவிரமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த அந்த நாட்டில் பொதுமக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 10 ஆம் தேதிக்குப் பின்னா் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் சவுண்டம்மாள் கூறியதாவது:

உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மி நோய்த் தொற்று பரவல் தாக்கத்தில் இருந்து ஈரோடு மாவட்ட மக்களைப் பாதுகாக்க அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் நாட்டில் இருந்தும், பிற நாடுகளில் இருந்து அந்த நாடு வழியாகவும் ஈரோடு மாவட்டத்துக்கு வந்தவா்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதில் டிசம்பா் 10ஆம் தேதிக்குப் பின்னா் 16 போ் ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்பவா்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்று பெற்ற பின்னரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும், அவா்களுடன் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 16 பேருக்கும் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்தால்தான் கரோனா பரவல் குறித்து தெரியவரும். எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா பரவல் குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கசவம் அணிதல், கை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com