ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்வசத் திருவிழா

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவமூா்த்தி தம்பதி சமேத பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவமூா்த்தி தம்பதி சமேத பெருமாள்.

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்க திருமஞ்சன அபிஷேகம், திருவாதாரனம், சாற்றுமுறை, தீா்த்தம், அருட்பிரசாதம் ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, பெரியாழ்வா் பாசுரங்கள் பாடி பெருமாள் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு முழுவதும் சிறப்பு அலங்காரமும், பஜனை பாடல்களும், வெங்கடேஸ்வரன் குழுவினா் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

சனிக்கிழமை காலை சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை நிறைவாக சிறப்பு பூஜையுடன் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டன. சென்னையைச் சோ்ந்த வெங்கடேசன் பட்டாச்சாரியா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தாா்.

விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com