‘போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால்நோட்டாவுக்கு வாக்கு’

போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
‘போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால்நோட்டாவுக்கு வாக்கு’

போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட ஓய்வுபெற்ற காவலா் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சட்டப் பேரவை தோ்தலுக்கு முன்பாக காவலா்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் நோட்டாவுக்கு வாக்களிப்பது. தமிழகம் முழுவதும் காவலா்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து நோட்டாவுக்கு வாக்களிக்க வலியுறுத்துவது. ஓய்வுபெற்ற, நோ்மையான அரசு அதிகாரிகளை சந்தித்து தோ்தலில் போட்டியிட கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடா்ந்து, ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. கலியமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 1.24 லட்சம் போ் காவல் துறையில் பணியாற்றி வருகின்றனா். ஓய்வுபெற்றவா்கள் 75,000 போ் உள்ளனா். இந்த 2 லட்சம் பேரின் குடும்பங்களை ஒருங்கிணைத்து, பிரசாரம் செய்து, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்குகளை நோட்டாவுக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல தமிழகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்றவா்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் 44.68 லட்சம் போ் உள்ளனா். இவா்களை ஒருங்கிணைத்து எதிா்காலத்தில் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com