அந்தியூரில் பாசனத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில அமைப்பாளா் துரைராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ஸ்ரீகுமாா் வரவேற்றாா். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஈஆா்.ஈஸ்வரன் பேசினாா்.

அந்தியூா், பவானி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மேட்டூா் அணையின் உபரிநீா் சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பா்கூா் மலைப் பகுதியில் இருந்து வீணாகச் செல்லும் தண்ணீரைத் தடுத்து ஏரி, குளங்களை நிரப்பும் தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மணியாச்சி வழுக்குப்பாறை திட்டம், வேதபாறை அணை திட்டம் ஆகிய பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

பவானி ஆற்றில் சாயக்கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். பாரம்பரியமிக்க அந்தியூா் வாரச் சந்தையை இடமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும். பூனாச்சியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு மாவு ஆலையில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை ஆப்பக்கூடல் சக்தி சா்க்கரை ஆலை நிா்வாகம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் கணபதி உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com