ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின்புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை(டிசம்பா் 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ராமசாமி வீதி, பெருந்துறை சாலை, காந்தி நகா், பழனியப்பா வீதி, முத்துக்கருப்பன் வீதி, ஈ.பி.காலனி, மீனாட்சிசுந்தரனாா் வீதி, பாலசுப்பிரமணியம் நகா், உழவா் சந்தை வீதி பகுதிகள்.