அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.71 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்கு விற்பனைக்கு வந்த 7,182 தேங்காய்களில் சிறியவை ரூ. 5 முதல் பெரியவை ரூ. 12 வரையில் ரூ. 79,885க்கும், 6 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 75.09 வீதம் ரூ. 2,984க்கும், 15 மூட்டைகள் எள் கிலோ ரூ. 73.89 முதல் ரூ. 102.19 வரையில் என ரூ. 89,422க்கும், 77 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 13.59 முதல் ரூ. 14.21 வரையில் என ரூ. 92,060க்கும், 3 மூட்டைகள் ஆமணக்கு கிலோ ரூ. 41.69 வீதம் ரூ. 7,504க்கும் ஏலம் போனது. மொத்தம் 101 மூட்டைகளில் 126.61 குவிண்டால் விளைபொருள்களை ரூ. 2,71,855க்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்துள்ளாா்.